“தீபாவளி பண்டிகை கால கடைகள்”காவல்துறை அதிகாரிகளை எச்சரித்த டிஜிபி! 

Photo of author

By Rupa

“தீபாவளி பண்டிகை கால கடைகள்”காவல்துறை அதிகாரிகளை எச்சரித்த டிஜிபி! 

Rupa

DGP warned police officers of "Diwali festival shops"!

“தீபாவளி பண்டிகை கால கடைகள்”காவல்துறை அதிகாரிகளை எச்சரித்த டிஜிபி!

நீண்ட நேரம் கடை திறந்து இருந்தாலும் அதன் உரிமையாளர்களிடம் எந்த ஒரு இடையூறும் போலீசார் கொடுக்கக் கூடாது என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கொரோனா ததொற்றானது இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில் மக்களால் எந்த ஒரு பண்டிகையும் இயல்பாக கொண்டாட முடியவில்லை. இந்த ஆண்டு தீபாவளி முன்னிட்டு அனைத்து ஊர்களும் கோலாகலமாக காட்சியளிக்கிறது. அந்த வகையில் அனைத்து ஆடை மற்றும் இனிப்பு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடைகள் அனைத்தும் 24 மணி நேரமும் இயங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவையும் மீறி போலீசார் ஏதேனும் கடை உரிமையாளருக்கு இடையூறு தந்தாள்  அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை முன்னிட்டு 10 க்கும் மேற்ப்பட ஊழியர்கள் பணிபுரியும் கடைகள் இயங்கலாம் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல பொதுமக்களும் நீதிமன்றத்தின் உத்தரவின் படி பசுமை பட்டாசுகள் வெடிக்க முன்வர வேண்டும். அது நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும். மேலும் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த நேரத்தில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சீன பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பட்டாசுக்களை பொதுமக்கள் வெடிக்க கூடாது. மக்களுக்கு இடையூறு தரும் வகையில் மருத்துவமனைகளுக்கு அருகிலோ அல்லது கோவில்களுக்கு அருகிலோ பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளனர். விதிகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.