6 கோடி ரூபாயிலான பணத்தில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்!

Photo of author

By Savitha

6 கோடி ரூபாயிலான பணத்தில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் – சித்திரை முதல் நாளில் ஆண்டுதோறும் முத்துமாரியம்மனுக்கு பணத்தினால் அலங்காரம் செய்துவருவதாக கோவில் நிர்வாகி பேட்டி

கோவை காட்டூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அம்பிகை முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 6 கோடி ரூபாய் பணத்தை வைத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தங்கம், வைரம், நவரத்தினங்கள் வைத்தும் அலங்காரம் ஆனது செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆண்டுதோறும் சித்திரை ஒன்றாம் தேதியை இந்தப் பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.

பின்னர் வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர். வசூலிக்கும் பணத்தை வங்கியில் கொடுத்து புது தாள்களாக மாற்றி கொள்வோம் என்றனர்.

மேலும் வருடம் வருடம் அம்மனுக்கு அலங்காரம் செய்யக் கூடிய பணத்தின் அளவு அதிகமாகவே கூடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர். தனலட்சுமி அலங்காரம் என்ற பெயரில் அம்மனுக்கு கோடிக்கணக்கான பணத்தை வைத்து அலங்கரித்து இன்று முழுவதும் அம்மன் காட்சியளிப்பதாகவும் பொதுமக்களும் பக்தர்களும் வந்து தரிசனம் செய்து கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.