இதயக்கோளாறு ரத்தஅழுத்தம் உள்ளிட்டவை வராமலிருக்க இதோ ஒரு அற்புத வழி!

Photo of author

By Sakthi

பாய்விரித்து குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு கையால் காலை மடக்கி பிடிக்க வேண்டும், மூச்சை மெதுவாக இழுத்து தலையை மேல் நோக்கி பார்க்க வேண்டும். 10 நொடிகள் அப்படியே இருக்க வேண்டும். அதன் பிறகு மெதுவாக தரையில் படுக்க வேண்டும்.

மறுபடியும் இதே போல பயிற்சி செய்ய வேண்டும் 3 முறைகள் பயிற்சி செய்யவும், காலை, மாலை, 2 வேளையும் சாப்பிடுவதற்கு முன்னால் இந்த பயிற்சியை செய்ய வேண்டும்.

வயிற்றுப்பகுதி நன்றாக அமுக்கப் படுவதால் உடலை ஒரு வில்போல் வளைத்து படுத்திருப்பதால் உடல் உறுப்புகள் எல்லாம் நன்றாக சக்தி பெற்று இயங்கும். சிறுகுடல், பெருங்குடல், கணையம், சிறுநீரகம், சிறுநீரகப்பை, இதயம், நுரையீரல், கல்லீரல், முதுகுத்தண்டு, தைராய்டு, பாராதைராய்டு, கண்கள், மூக்கு. உள்ளிட்ட அனைத்தும் மிக சிறப்பாக இயங்குகிறது.

இந்த உறுப்புகள் நன்றாக பிராண சக்தி பெற்று இயங்குவதால் மூட்டு வலி, கழுத்து வலி, இதய வலி, சர்க்கரை, ரத்த அழுத்தம், முதுகுவலி, உள்ளிட்ட பிரச்சனைகள் வராமல் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆசனத்தை உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்தம், மூட்டு வீக்கம், இருப்பவர்கள் செய்ய வேண்டாம். உடல் வளையும் தன்மை இருப்பவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், உடல் ஆரோக்கியம் நம்மிடம் என்றும் நிலைத்திட பயிற்சி செய்யுங்கள் என தெரிவிக்கப்படுகிறது.