தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து ஏன்? காரணம் இதோ!

Photo of author

By Sakthi

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து ஏன்? காரணம் இதோ!

Sakthi

அண்மைக் காலமாகவே திரைப்பிரபலங்கள் விவாகரத்து அதிகரித்துவருகிறது, பாலிவுட் நடிகர் அமீர்கானில் ஆரம்பித்து பல திரை பிரபலங்கள் அவர்களுடைய விவாகரத்து செய்தியை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள். தற்போது அந்த வரிசையில் மேலும் ஒரு தம்பதியினர் விவாகரத்து செய்தியை அறிவித்திருக்கிறார்கள்.

அந்த தம்பதியர்கள் வேறுயாருமல்ல கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தற்போது திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் தனுஷ் அவர்களும் தான் .இவர்களுடைய விபத்து குறித்து இருவரும் ஒரே இதமான அறிக்கையை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதில் ஐஸ்வர்யா தெரிவித்திருப்பதாவது நண்பர்களாகவும், தம்பதிகளாகவும், பெற்றோர்கள் ஆகவும் ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாக 18 ஆண்டுகள் இணைந்து இருந்தோம் எங்களுடைய பயணத்தில் வளர்ச்சி, புரிதல், சரி பார்த்துக்கொள்ளுதல் மற்றும் மாற்றி அமைத்தால் என்று நாங்கள் இருந்தோம் என தெரிவித்திருக்கிறார்.

இன்று நாங்கள் எங்களுடைய பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கின்றோம் தனுஷூம் நானும் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்து இருக்கிறோம். அதோடு எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவு செய்திருக்கிறோம். தயவுசெய்து எங்கள் முடிவை மதித்து இதனை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும் என்று தெரிவித்திருக்கிறார்.

இவர்களுடைய இந்த திடீர் விவாகரத்து முடிவதற்கு பல காரணங்கள் தெரிவிக்கப்படுகிறது, அதன் அடிப்படையில் தனுஷ், ஐஸ்வர்யா தொடர்பான காதல் கிசுகிசு வந்த சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் ரஜினி இந்த திருமணத்தை நடத்தி வைத்தார் என்று சொல்லப்படுகிறது. அதோடு ஐஸ்வர்யாவிற்கும் கூட இந்த திருமணத்தில் பெரிதாக உடன்பாடு இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஐஸ்வர்யா தனுஷை விட வயதில் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு பிரபல நடிகை ஒருவர் தான் இந்த விவகாரத்திற்கு காரணம் என்றும், கூறப்படுகிறது. அந்த நடிகைக்கும் சமீபத்தில் தான் விவாகரத்து ஆனது, அதற்கு கூட இவர் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆகவே தனுஷ் பெண்கள் விவகாரத்தில் சற்றே முரண்பாடாக இருந்ததுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதுவரையில் ஏராளமான நடிகைகளுடன் தனுஷ் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே இதுவும் அவர்களுடைய விவாகரத்தை காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.