விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற தனுஷ் – ஐஸ்வர்யா; இனி சேர்வதற்கு வாய்ப்பே இல்லை!

0
226
Dhanush - Aishwarya went to court for divorce; No chance to join anymore!
Dhanush - Aishwarya went to court for divorce; No chance to join anymore!

விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற தனுஷ் – ஐஸ்வர்யா; இனி சேர்வதற்கு வாய்ப்பே இல்லை!

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள் தான் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி, இவர்கள் இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.இந்த தம்பதிகளுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.திருமணமாகி கிட்டத்தட்ட 18 ஆண்டுகளான நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், இப்போது வரை அவரவர் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.தனுஷ் வழக்கம்போல் நடிப்பு, இயக்கம் என பிசியாக உள்ளார்.அதேபோல், ஐஸ்வர்யா சமீபத்தில் லால் சலாம் என்ற படத்தை இயக்கி இருந்தார்.

இதற்கிடையில் இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க இருவீட்டார் மற்றும் நண்பர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள்.எப்படியும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்றும் கூறப்பட்டது.மேலும், இவர்கள் பிரிந்து மட்டும்தான் இருந்தார்களே தவிர விவாகரத்து வழக்கு எதுவும் தாக்கல் செய்யவில்லை.

அதனால் நிச்சயம் சமரசமாக பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சேர்த்து வைத்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தற்போது ரசிகர்களுக்கு ஷாக் அளிக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

அதாவது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அந்த மனுவில் 2004ஆம் ஆண்டு தங்களுக்கு நடந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென கேட்டு கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Previous articleமூன்றாம்பாலினத்தவருக்காக திறக்கப்பட்ட உலகின் முதல் பள்ளிவாசல்!
Next articleநடிகைஅமலாவை காதலித்த வில்லன் நடிகர்; ஹீரோவுக்கு ஓகே சொல்லி இரண்டாம் தாரமான அமலா!