தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனைக்கு முடிவு சொன்ன ஆர் ஜே பாலாஜி!!

Photo of author

By Gayathri

கடந்த சில நாட்களாகவே தனுஷ் மற்றும் நயன்தாராவின் உடைய பிரச்சனை குறித்த விவாதங்கள் செய்திகள் தான் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

தன்னுடைய காதல் திருமணம் குறித்து ஆவணப்படம் வெளியிட நினைத்த நயன்தாரா அவர்கள், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் முதல் முதலில் சந்தித்த நானும் ரவுடிதான் படத்திலிருந்து 3 வினாடி கொண்ட வீடியோ ஒன்றை தங்களுடைய ஆவண வீடியோவில் இணைத்து வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் அவர்கள் இந்த 3 வினாடி வீடியோவிற்கு 10 கோடி ரூபாய் பணம் கேட்டு நோட்டஸ் அனுப்பியுள்ளார்.

இந்த பிரச்சனைக்கு நயன்தாராவின் தரப்பில் இருந்தும் தனுஷின் தரப்பில் இருந்தும் ஒருவரை ஒருவர் இவர் மீது தான் தவறு, அவர் மீது தான் தவறு என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். நெட்டிசன்கள் ஒரு பக்கம் தனுஷிற்கு ஆதரவாக நிற்க, நடிகைகள் ஒரு பக்கம் நயன்தாராவிற்கு ஆதரவாக நிற்கின்றனர்.

மேலும், நடிகர் தனுஷை கண்டித்து ஒரு 3 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார் நயன்தாரா. அவருக்கு ஆதரவாக அவரது கணவர் விக்னேஷ் சிவனும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இது போதாது என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா வெளியிட்ட அந்த பதிவை லைக் செய்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர் பிரபல நடிகைகள், ஸ்ருதிஹாசன், அனுபமா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நஸ்ரியா. இவர்கள் அனைவரும் தனுஷுடன் நாயகிகளாக நடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற ஒரு சமயத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான ஆர் ஜே பாலாஜி இடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்கும் பொழுது, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா குறித்த கேள்வியை கேட்டுள்ளனர். அதற்கு அவரும் அவருடைய கருத்துக்களை தெரிவித்ததோடு, இதனை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

செய்தியாளர்களிடம் ஆர் ஜே பாலாஜி அவர்கள் பேசியதாவது, “ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். அது போல கூட்டத்தாடி ரெண்டுபட்டால் ஊருக்கே கொண்டாட்டம். தனுஷ் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் மிக சிறந்த நடிகர்கள். பல விஷயங்கள் தெரிந்தவர்கள். கட்டாயம் இந்த பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்வார்கள். இதில் மக்கள் செய்வதற்கு ஒன்றுமே இல்லை” என்று இவர்களுடைய விஷயங்களை குறித்து பேசிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நெற்றியில் அடித்தார் போல பதில் அளித்துள்ளார் ஆர் ஜெ பாலாஜி அவர்கள்.