பிளடி பெக்கர் கதையில் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி தான் என் சாய்ஸ்!! கவினை சுத்தமா பிடிக்கலை- நெல்சன் ஓபன் டாக்!!

Photo of author

By Rupa

பிளடி பெக்கர் கதையில் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி தான் என் சாய்ஸ்!! கவினை சுத்தமா பிடிக்கலை- நெல்சன் ஓபன் டாக்!!

Rupa

Dhanush and Vijay Sethupathi are my choice for Bloody Becker!! Don't Like Gavin Purely - Nelson Open Talk!!
நடிகர் கவின் நடித்து தீபாவளி அன்று வெளிவர இருக்கும் “பிளடி பெக்கர்” திரைப்படம் இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தினைப் பற்றிய சுவாரஸ்யமான தகவலை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான நெல்சன் திலிப் குமார் பகிர்ந்துள்ளார்.
இப்படத்திற்கு எனது முதல் தேர்வாக தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியே இருந்தனர். இதில் கதை நாயகனாக கவின் நடிப்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை. எனினும் இயக்குனர் கவின் தான் வேண்டுமென்று பிடிவாதமாக சொல்லிவிட்டார்.
“பிளடி பெக்கர்” படத்தினை பார்த்த பின்பு தான் கவினைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இக்கதாப்பாத்திரத்திற்கு சிறப்பாக அமைந்திருக்காது என்பதை உணர்ந்தேன் என்றார்.
மேலும், அவர் நல்ல வேலையாக இயக்குனர் சிவபாலனின் முடிவை நான் ஏற்றுக் கொண்டேன். இல்லையென்றால் பெரிய தவறு நடந்திருக்கும் என்று ஒப்புக்கொண்டார், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான நெல்சன் திலீப்குமார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அறிவிப்பு 2024 மே 3ல் படக்குழு சார்பில் ஒரு ப்ரோமோ வீடியோ மூலம் வெளியிட்டுள்ளனர்.