தனுஷின் அடுத்த பாலிவுட் படம்: மதுரையில் படப்பிடிப்பு! ஆரவாரத்துடன் காத்திருக்கும் ரசிகர் கூட்டம்..

Photo of author

By Parthipan K

தனுஷின் அடுத்த பாலிவுட் படம்: மதுரையில் படப்பிடிப்பு! ஆரவாரத்துடன் காத்திருக்கும் ரசிகர் கூட்டம்..

Parthipan K

தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

இவர் ஏற்கனவே பாலிவுட்டில் “ ராஞ்சனா”, “ஷமிதாப்” ஆகிய இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார் தற்பொழுது மூன்றாவது படமாக  ராஞ்சனா பட இயக்குனருடன் “அத்ராங்கெரே” என்ற படத்தில்   மீண்டும் இணைந்துள்ளார் தனுஷ்.

“அத்ராங்கெரே” என்ற படத்தில் தனுஷுடன் பாலிவுட்டின் ஆக்சன் கிங் அக்ஷய் குமார் இணைவது ரசிகர்களிடையே பெரிய ஆரவாரத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஜனவரி மாதத்தில் இந்த படத்திற்கான அங்கீகார அறிவிப்பு வெளியான நிலையில் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அதன்பின் தொடக்ககாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு  மீண்டும் அக்டோபர் மாதத்தில் மதுரையில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

பின்னர் அக்ஷய்குமார்  உரிய காட்சிகள் அனைத்தும்  டெல்லி, மும்பையில் வைத்து படப்பிடிப்பு நடக்க உள்ளதாகவும்  திட்டமிடப்பட்டுள்ளது.