மழையால் கேப்டன் மில்லர் பட ஷூட்டிங் பாதிப்பு… மூன்று மாதங்கள் ரெஸ்ட்!

0
172

மழையால் கேப்டன் மில்லர் பட ஷூட்டிங் பாதிப்பு… மூன்று மாதங்கள் ரெஸ்ட்!

தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு தமிழக கேரள எல்லையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

பல மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் தனுஷ் அடுத்து ராக்கி மற்றும் சாணிக்காயிதம் ஆகிய படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு கேப்டன் மில்லர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகும் படம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஷூட்டிங் தென்காசி மற்றும் குத்தாலம் ஆகிய பகுதிகளில் நடந்தது.  அதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு தமிழக கேரள எல்லையில் நடத்த பிரம்மாண்டமான சுதந்திரத்துக்கு முந்தைய கால அரங்கு ஒன்று உருவாக்கப்பட இருந்தது. ஆனால் அங்கு இப்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் இப்போது படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனால் மூன்று மாதத்துக்கு படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளார்களாம் படக்குழுவினர். படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். மதன் கார்க்கி வசனங்களை எழுத ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். படம் 1930 களில் நடப்பது போன்ற வரலாற்றுக் கதையாக உருவாக உள்ளது. இந்த படம் இதுவரை தனுஷ் கேரியரில் மிக அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக உருவாகி வருகிறது.

Previous articleதமிழக ஆளுநருக்கு வார்னிங் கொடுத்த மநீம தலைவர் கமல்! பாஜக வின் மறைமுக அரசியல் தலைவராக ஆளுநர் செயல்படுவது அழகல்ல!
Next articleவாரிசு முதல் சிங்கிள் எப்பதான் ரிலீஸ் ஆகும்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!