இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனுஷ்!! சர்ப்ரைஸ் கொடுத்த 43 வது படத்தின் படக்குழு!!

Photo of author

By CineDesk

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனுஷ்!! சர்ப்ரைஸ் கொடுத்த 43 வது படத்தின் படக்குழு!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளராகவும் பின்னணி பாடகராகவும் உள்ளார். மேலும் இவர் தமிழ்த்திரைப்பட பாடல் ஆசிரியர் ஆவார். மேலும் இவர் திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் முதலில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைதொடர்ந்து சுல்தான், புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி மாரி அசுரன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் ரஞ்சனா போன்ற இந்தி திரைப்படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமாகியுள்ளார்.

இவர் தற்போது 40-க்கும் மேலான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் 13 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், 9 விஜய் டிவி விருதுகள், 7 தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள், 5 விகடன் விருதுகள், திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்.மேலும் இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக்கொண்டு போர்பஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் தனுஷ் ஆறுமுறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலமாக படங்களை தயாரித்து வருகிறார்.இவருக்கு சிறந்த நடிகர் விருது மட்டுமல்லாமல் அவருடைய தயாரிப்பில் வெளிவந்த விசாரணை படுத்திருக்கும் தேசிய விருதும் வழங்கப்பட்டது.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து தற்போது வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது. இதை தொடர்ந்து இன்று இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இவரின் 43 வது திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் இவரின் 43 வது திரைப்படத்திற்க்கு மாறன் என்ற பெயர் வைத்துள்ளனர். இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனுஷ்க்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். இன்று வெளியான 43 வது படத்தின் போஸ்டரை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.