உணவு டெலிவரி செய்பவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்!

Photo of author

By Vinoth

உணவு டெலிவரி செய்பவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்!

தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞராக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் நேரடியாக திரையரங்கில் வெளியாகிறது. அசுரன் என்ற ஹிட் படத்துக்குப் பிறகு தனுஷுக்கு ஹிட் படங்கள் அமையவில்லை. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இன்று எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிறது திருச்சிற்றம்பலம்.

இந்த படத்தில் தனுஷ்  உணவு டெலிவரி செய்யும் இளைஞராக நடித்துள்ளார். அதையடுத்து தனுஷ் ரசிகர்கள் நெல்லை மாவட்டத்தில் இந்த பணிபுரியும் இளைஞர்கள் 50 பேருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

திருச்சிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ளார். படத்தில் தனுஷுடன் பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா , நித்யா மேனன், பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் மித்ரன் தனுஷை வைத்து ‘யாரடி நீ மோகினி, குட்டி மற்றும் உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கியவர்.

தந்தை மற்றும் மகனுக்கு இடையே நடக்கும் லவ் & ஹேட் ரிலேஷன்ஷிப்பை சொல்லும் படமாக திருச்சிற்றம்பலம் உருவாகியுள்ளது. படத்தில் தனுஷின் தந்தையாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். தனுஷுக்கு தாத்தாவாக பாரதிராஜா நடித்துள்ளார். தனுஷ் மற்றும் பாரதிராஜா காம்பினேஷன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.