‘எனை நோக்கி பாயும் தோட்டா’விற்கு டைம் குறித்த சென்சார்

Photo of author

By CineDesk

‘எனை நோக்கி பாயும் தோட்டா’விற்கு டைம் குறித்த சென்சார்

CineDesk

Updated on:

‘எனை நோக்கி பாயும் தோட்டா’விற்கு டைம் குறித்த சென்சார்

தனுஷ் நடித்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 156 நிமிடங்கள் கொண்டதாக சென்சார் செய்யப்பட்டுள்ளது, அதாவது இந்த படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 26 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் தள்ளிப்போய் கொண்டிருந்த நிலையில் தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் இந்த படத்தின் உரிமையை பெற்று ரிலீஸ் செய்கிறார். இதனால் நாளை மறுநாள் இந்த படம் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது

மேலும் இந்த படத்திற்கான முன்பதிவுகள் இன்று முதல் தொடங்கியுள்ளதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் விறுவிறுப்பாக இந்த படத்தின் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.

தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். கவுதம் மேனன் இயக்கியுள்ள இந்த படம் அவருக்கு திருப்பத்தை தரும் படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.