டிசம்பர் 27ல் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்!

Photo of author

By CineDesk

டிசம்பர் 27ல் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்!

கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படம் சமீபத்தில் தமிழகம் முழுவதும் வெளியாகியது. இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் வாய்ஸ் ஓவர் மிக அதிகமாக இருந்ததாகவும் படத்தின் காட்சிகள் பல பார்வையாளர்களுக்கு புரியவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ரூ 8 கோடி நஷ்டம் என்ற செய்தி கோலிவுட்டில் பரவி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் வரும் 27ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியாக உள்ளது. தெலுங்கில் காதல் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதும் கௌதம் மேனனின் முந்தைய படங்கள் தெலுங்கில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ’எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம்’ தெலுங்கில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘தோட்டா’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகும் இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் வெற்றி பெற்றால் தயாரிப்பாளரின் நஷ்டம் ஈடு கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளரின் நஷ்டத்தை தனுஷின் தெலுங்கு ரசிகர்கள் குறைப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘மறுவார்த்தை’ உள்பட அனைத்து பாடல்களும் தமிழை போலவே தெலுங்கிலும் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.