ரிலீசுக்கு தயாராகிறது தனுஷின் இரண்டு படங்கள்: புதிய தகவல்!

0
182

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய ’ஜகமே தந்திரம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது என்று வெளியான செய்தியை பார்த்தோம்

இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தொழில்நுட்ப பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த ’கர்ணன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சற்று முன் தனுஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகளும் விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகவும் இந்த படமும் மே அல்லது ஜூன் மாதம் ரிலீஸுக்கு தயாராகி விடும் என்றும் கூறப்படுகிறது. தனுஷ் நடித்த ’அசுரன்’ மற்றும் பட்டாஸ் ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து சமீபத்தில் வெளியானது போல் அவர் நடிப்பில் உருவான ’ஜகமே தந்திரம் மற்றும் ’கர்ணன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து தற்போது தனுஷை பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளார் இந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleஇந்தியா வந்தடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி! பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு!
Next articleவரலாறு காணாத பனிப்புயல்: ஸ்தம்பித்தது இங்கிலாந்து அதிர்ச்சி புகைப்படங்கள்