தன்னுடைய வேலைகளில் பிஸியாக இருக்கும் தனுஷ்!! பயோபிக்கிற்காக கண்டிஷன் போட்டு காத்துக் கொண்டிருக்கும் இளையராஜா!!

Photo of author

By Gayathri

இளையராஜாவின் உடைய பயோபிக் படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்க, கமலஹாசன் அவர்கள் இப்படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார். மேலும் இதில் தனுஷ் அவர்கள் இளையராஜாவாகவே நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால், தற்பொழுது தனுஷ் அவர்கள் ஹாலிவுட் மிக பிஸியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அடுத்ததாக அவர் ஹிந்தியில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு படம், லப்பர் பந்து இயக்குநருடன் ஒரு படம், அமரன் இயக்குநருடன் ஒரு படம், போர்தொழில் இயக்குநருடன் ஒரு படம், இளையராஜாவின் பயோபிக், இட்லி கடை என பல படங்களை வைத்திருக்கிறார். இவற்றில் இட்லி கடை படத்தை அவரே இயக்கி நடிக்கவும் செய்கிறார். அந்தப் படத்தின் வேலைகள் மும்முரமாக போய்க்கொண்டிருக்கின்றன என்ற தகவலும் வெளியாகி உள்ளன.

இப்படி இருக்கும் சூழ்நிலையில், தமிழ் சினிமாவின் இசை உலகை மாற்றியமைத்த இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

முதலில் இந்த படத்தினை தயாரிப்பதாக இருந்த மெர்குரி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிலிருந்து விலகிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனுஷ் அவர்களும் தன்னுடைய இட்லி கடை படத்தில் வேலைகளை மிக வேகமாக பார்த்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இளையராஜா அவர்களோ இதைத்தொடர்ந்து ஒரு முடிவினை எடுத்துள்ளார். அதாவது தன்னுடைய பயோபிக் படத்தினை எடுக்க வேண்டும் என்றால் தன்னுடன் இயக்குனர் மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் ஒரு வருட காலம் இணைந்து பயணிக்க வேண்டும் என அவர் தெரிவித்து இருக்கிறார். இளையராஜா தெரிவித்ததை போன்று இயக்குனர் இளையராஜாவோடு பயணிக்க தொடங்கிவிட்டார்.

ஆனால், நடிகர் தனுஷ் அவர்கள் பல படங்களில் கமிட் ஆகி இருப்பதாலும் தான் இயக்கக்கூடிய படத்தின் வேலைகள் அதிகமாக இருப்பதாலும் இளையராஜாவுடைய இந்த கண்டிஷனுக்கு அவரால் ஒத்துழைப்பு தர முடியவில்லை என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.