தனுஷ் தான் பெஸ்ட்!  வாத்தி படத்திற்கு வெளியான முதல் விமர்சனம்! 

0
324
#image_title

தனுஷ் தான் பெஸ்ட்!  வாத்தி படத்திற்கு வெளியான முதல் விமர்சனம்! 

தனுஷின் வாத்தி படம் குறித்து விமர்சனம் வெளியாகி உள்ளது.

தெலுங்கு சினிமாவின் இளம் இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் தான் வாத்தி. இந்தப் படத்தை சித்தாரா எண்டெர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இப்படம் நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார் மேலும் இந்த படத்தில் சாய்குமார், தணிகலபரணி, சமுத்திரக்கனி, தோடப்பள்ளி மது, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன்,பிரவீணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தமிழில் வாத்தி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 4-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குனரான வெங்கி அட்லூரி கல்வியானது சேவையாக இல்லாமல் தற்போது வியாபாரமாக மாறிவிட்டது. அதை வாத்தி படம் அழுத்தமாக பேசும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்திற்கான முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது.

ஓவர்சீஸ் சென்சார்போடு உறுப்பினரான உமர் சந்த் வாத்தி படத்தை பார்த்து தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர்

வாத்தி படத்தின் ஓவர் சீஸ் சென்சார்போர்டு ஸ்க்ரீனிங் முடிந்துவிட்டது. வாத்தி படம் பார்த்தேன்.. தனுஷ் தான் பெஸ்ட் என குறிப்பிட்டுள்ளார்.

இதைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் ஆமாம் 100 சதவீதம் உண்மை! சரியாக சொன்னீர்கள்! தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்று கொண்டாடி வருகின்றனர்.