மாஸ்டருக்கு நிகராக வியாபாரத்தை முடித்த தனுஷ் படம்

0
184

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திற்கு நிகரான வியாபாரத்தை தனுஷின் படம் செய்துள்ளதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் வியாபாரம் அதன் படப்பிடிப்பு 70% நடந்து கொண்டிருந்தபோதே முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை, தெலுங்கு மாநில ரிலீஸ் உரிமை, வெளிநாட்டு ரிலீஸ் உரிமை உள்பட அனைத்து உரிமைகளும் முடிந்துவிட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் மாஸ்டர் படத்தை அடுத்து தற்போது தனுஷ் நடித்துள்ள 40வது படத்தின் வியாபாரமும் அந்த படத்திற்கு டைட்டில் வைக்க முன்னரே முடிந்துவிட்டது. தனுஷ் 40 வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள நிலையிலிருந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களின் பெயர்களை இந்நிறுவனத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டின்படி இந்தப் படத்தின் தமிழக உரிமையை ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் தெலுங்கு, மலையாளம், ஓவர்சீஸ் உரிமைகளை வாங்கியுள்ள நிறுவனங்களின் பட்டியலையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleஒட்டு மொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கும் திரௌபதி படம் வெளியீடு குறித்து இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல்
Next articleதிரௌபதி படத்தின் இயக்குனர் அதிரடி திரைப்படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு