மாரி செல்வராஜ் படத்துக்காக கெட்டப் மாற்றிய தனுஷ்: கசிந்தது புகைப்படம் !

Photo of author

By Parthipan K

மாரி செல்வராஜ் படத்துக்காக கெட்டப் மாற்றிய தனுஷ்: கசிந்தது புகைப்படம் !

பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களில் பரியேறும் பெருமாளும் ஒன்று. 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட முக்கிய விருதுகளில் இப்படம் விருதுகளை அள்ளியது. இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் பாரட்டப்பட்டார். இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து கடந்த ஓராண்டாக நடந்த திரைக்கதை அமைக்கும் பணிகள் முடிவுற்று இப்போது கர்ணன் எனப் பெயர் சூட்டப்பட்டு அந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மாஞ்சோலை கலவரத்தில் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் தனுஷ் தேயிலை தோட்ட தொழிலாளியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட தனுஷின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்துக்காக தனுஷ் தனது தோற்றம் மற்றும் சிகை ஆகியவற்றில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளார் என சொல்லப்படுகிறது.