வாத்தி படக்குழுவின் மீது கடுமையான அதிருப்தியில் நடிகர் தனுஷ்!

0
161

வாத்தி படக்குழுவின் மீது கடுமையான அதிருப்தியில் நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் முதல்முறையாக நேரடி தெலுங்குப் படமான வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். கென் கருணாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படம் தமிழ், தெலுங்க என  இரண்டு மொழிகளிலும் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷின் திருச்சிற்றம்பலம் ரிலீஸாகி வெற்றி பெற்ற நிலையில், நாளை நானே வருவேன் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. அதனால் இந்த ஆண்டு தனுஷின் மூன்று படங்கள் திரையரங்கில் வெளியாக உள்ளன.

ஆனால் தனுஷுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் வாத்தி படக்குழு பாதியை மட்டுமே இதுவரை கொடுத்துள்ளார்களாம். மீதியைக் கொடுக்காமல் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது அவருக்கு அதிருபதியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வாத்தி படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படம் ரிலீஸை ஒட்டி எந்தவொரு ப்ரமோஷனும் நடக்கவில்லை. தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க தென்காசியில் முகாமிட்டுள்ளார். இயக்குனர் செல்வராகவனும் எந்தவொரு ப்ரமோஷனிலும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதமிழ் ரசிகர்களைக் கடுப்பாக்கிய சுஹாசினியின் பேச்சு… பொன்னியின் செல்வன் ப்ரமோஷனில் உளறல்
Next articleவிஜய்யுடன் இணையும் தெலுங்கு முன்னணி ஹீரோ! இந்த படத்தில் தானா?