ஒரு நாள் முன்பே வெளியான நானே வருவேன் அப்டேட்… மாஸாக வெளியான போஸ்டர்!

0
123

ஒரு நாள் முன்பே வெளியான நானே வருவேன் அப்டேட்… மாஸாக வெளியான போஸ்டர்!

நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் திரைப்படம் நானே வருவேன்.

தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களில் பிஸியாக நடித்து வந்த போதிலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி அந்த படத்துக்கு கதையையும் தானே எழுதினார்.

இந்த படத்தின் மூலம் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தனது தம்பி தனுஷை இயக்கி முடித்துள்ளார். இவர்களது, கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், தனுஷுக்கு ஜோடியாக இளம் நடிகை இந்துஜா நடித்துள்ளார். வழக்கமாக செல்வராகவன் படங்கள் போல இல்லாமல் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இந்த படத்தின் போஸ்டர் நாளை தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு நாள் முன்பாகவே தற்போது படத்தின் போஸ்டரை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். காட்டுப்பகுதியில் தனுஷ் வில் அம்போடு இருக்கும் விதமாக போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.