நானே வருவேன் சிறப்புக் காட்சிகள் கிடையாது…. ரசிகர்கள் அதிர்ச்சி!

0
205

நானே வருவேன் சிறப்புக் காட்சிகள் கிடையாது…. ரசிகர்கள் அதிர்ச்சி!

தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படம் இன்னும் இரு தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது.

இயக்குனர் செல்வராகவனும் நடிகர் தனுஷும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’. இவர்களது, கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், தனுஷுக்கு ஜோடியாக இளம் நடிகை இந்துஜா நடித்துள்ளார். வழக்கமாக செல்வராகவன் படங்கள் போல இல்லாமல் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இதையடுத்து பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்டமான பேன் இந்தியா திரைப்படம் ரிலீஸாகும் நேரத்தில் ரிலீஸாகிறது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என சொல்லபப்டுகிறது. ஆனாலும் தயாரிப்பாளர் தாணு துணிந்து இந்த படத்தை ரிலீஸ் செய்கிறார். த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆனாலும், ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை மட்டுமே கவரும் என்பதால் இப்போது ரிலீஸ் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நானே வருவேன் திரைப்படத்துக்கு அதிகாலை காட்சிகள் எதுவும் இல்லாமல் வழக்கமான நேரத்தில்தான் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் ரிலீஸான தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் கூட இப்படிதான் சிறப்புக் காட்சிகள் இல்லாமல் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் அதிகாலைக் காட்சிகள் இப்போது சில படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்களை கொடுப்பதும் ஒரு முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.

Previous articleயுட்யூப் தொகுப்பளரிடம் அவமரியாதை… பிரபல மலையாள நடிகர் கைது!
Next article“எதாவது மருந்து கொடுத்து என்ன விளையாட வையுங்க…” போட்டிக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சூர்யகுமார்