பொன்னியின் செல்வனோடு மோதுகிறதா தனுஷின் நானே வருவேன்?

Photo of author

By Vinoth

பொன்னியின் செல்வனோடு மோதுகிறதா தனுஷின் நானே வருவேன்?

பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்வராகவன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தனது தம்பி தனுஷை இயக்கியுள்ள படமாக ‘நானே வருவேன்’ படம் உருவாகியுள்ளது. இவர்களது, கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், தனுஷுக்கு ஜோடியாக இளம் நடிகை இந்துஜா நடித்துள்ளார். வழக்கமாக செல்வராகவன் படங்கள் போல இல்லாமல் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து செல்வராகவனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இரு வேடங்களில் தனுஷ் நடித்துள்ள நிலையில் ஒரு கதாபாத்திரம் நல்லவனாகவும், மற்றொரு கதாபாத்திரம் வில்லனாகவும் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றன.

இந்நிலையில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. படம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே தேதியில்தான் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் அதே நாளில்தான் ரிலீஸ் ஆக உள்ளது. பேன் இந்தியா திரைப்படமாக பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆவதால், அதே தேதியில் நானே வருவேன் ரிலீஸ் ஆனால் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.