வாத்தி படத்தில் இருந்து வெளியேறிய தமிழக விநியோகஸ்தர்… இதுதான் காரணமா?

Photo of author

By Vinoth

வாத்தி படத்தில் இருந்து வெளியேறிய தமிழக விநியோகஸ்தர்… இதுதான் காரணமா?

Vinoth

Updated on:

வாத்தி படத்தில் இருந்து வெளியேறிய தமிழக விநியோகஸ்தர்… இதுதான் காரணமா?

வாத்தி திரைப்படத்தை தமிழகத்தில் மதுரை அன்புச்செழியன் வெளியிட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின.

நடிகர் தனுஷ் முதல்முறையாக நேரடி தெலுங்குப் படமான வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். கென் கருணாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி இரண்டு மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை மதுரை அன்புசெழியன் தன்னுடைய கோபுரம் பிலிம்ஸ் சார்பாக வெளியிடுவார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் சமீபத்தில அவருக்கு சம்மந்தமான இடங்களில் நடந்த ரெய்டால் அவர் பொருளாதார ரீதியாக இக்கட்டான நிலையில் இருப்பதால் இப்போது இந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தை யார் வெளியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதே அன்புசெழியன் தயாரிப்பில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படம் தொடங்குவதிலும் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை தனுஷே இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் இந்த படத்துக்காக தனுஷுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் பாதி மட்டுமே வாத்தி தயாரிப்பாளர் கொடுத்துள்ளாராம். மீதியைக் கொடுக்காமல் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது அவருக்கு அதிருபதியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.