தனுஷ் நடிக்கும் கர்ணன்!எப்போது படப்பிடிப்பு?

Photo of author

By CineDesk

அசுரன் பட பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் ’பட்டாஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார் படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது இதனையடுத்து ‘கர்ணன்’ படத்தைத் தொடங்க தனுஷ் முடிவு செய்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த படத்தின் முதற்கட்ட லண்டன் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பினார் தனுஷ். அடுத்த ஓரிரு நாட்களிலேயே ’பட்டாஸ்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கினார்.
துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சிநேகா, மெஹ்ரீன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்துள்ளனர்.
தற்போது ‘பட்டாஸ்’ படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விவேக் – மெர்வின் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.


‘பட்டாஸ்’ படம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் தனுஷ். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலியில் தொடங்கவுள்ளது. தாணு தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ‘கர்ணன்’ எனப் பெயரிட்டுள்ளனர். ரஜிஷா விஜயன் நாயகியாக நடிக்கவுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.