தர்பார் வசூல் மந்தம் – முன்கூட்டியே ரிலிஸாகும் தனுஷின் பட்டாஸ் !

Photo of author

By Parthipan K

தர்பார் வசூல் மந்தம் – முன்கூட்டியே ரிலிஸாகும் தனுஷின் பட்டாஸ் !

ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளதால் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் பட்டாஸ் ஒரு நாள் முன்கூட்டியே வெளியாக உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார்  நடித்த (சில நிமிடங்கள் மற்றும் இரண்டு பாட்டு) ‘தர்பார்’ படம் நேற்று பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகியது. இந்நிலையில் முதல் காட்சி முடிந்த நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்த படமாக மாறியது தர்பார். இதனால் முதல் நாளிலேயே சில காட்சிகள் டிக்கெட் எளிதாக கிடைக்க ஆரம்பித்தது. இந்நிலையில் போகப் போக வசூல் மந்தமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தர்பாரின் இந்த மந்தத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த சத்யஜோதி பிலிம்ஸ் வரும் 16ஆம் தேதி வெளியாக இருந்த தங்கள் ‘பட்டாஸ்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்து, ஒரு நாள் முன் கூட்டி 15 ஆம் தேதியே வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின்  சென்சார் பணிகளும் முடிந்து’யூ’ சான்றிதழ் வாங்கியுள்ளனர் படக்குழுவினர். தனுஷை வைத்து கொடி என்ற படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ள பட்டாஸ் படத்துக்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

போனமுறை பொங்கலுக்கு தனது பேட்ட படத்தோடு களமிறங்கிய ரஜினி அஜித்தின் விஸ்வாசம் படத்தை விட கம்மியான வசூலே செய்தார். இம்முறை தனுஷின் பட்டாஸுடன் மோத இருக்கிறார். வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.