மீண்டும் ரௌடி பேபி உடன் இணையும் தனுஷ்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0
37
Dhanush reunites with Rowdy Bobby!! Fans in celebration!!
Dhanush reunites with Rowdy Bobby!! Fans in celebration!!

மீண்டும் ரௌடி பேபி உடன் இணையும் தனுஷ்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கிவருகிறார். மேலும் கேப்டன் மில்லர் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை சண் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. அதனை தொடர்ந்து தனுஷ்க்கு ஜோடியாக துஷ்ரா விஜய் நடித்துள்ளார். இவர்களை தொடர்ந்து எஸ்.ஜெ.சூர்யா , சந்திப் கிஷன் போன்ற பிரபல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

அதனை தொடர்ந்து தனுஷ் ராயர் என்ற தலைப்பில் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த படம் வட சென்னையை மையமாக கொண்ட பட என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக இவர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக நம்பர் 1 ஹீரோயினாக தெலுங்கு திரைத்துறையில் வலம் வரும் ரஷ்மிகா மந்தனா  உடன் இணைந்து நடிக்க உள்ளார்.

இவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் 100 கோடிக்கு மேல் வசூல் ஆகிறது. மேலும் இவருக்கு அதிக அளவில்  ரசிகர் கூட்டமும்  உள்ளது. மேலும் இந்த  படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளளர் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படம் குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளார்கள்.

author avatar
Jeevitha