கூட்டமாக மொய்த்த ரசிகர்கள்… நடிகையைக் காப்பாற்றி பத்திரமாக அழைத்துச் சென்ற தனுஷ்

0
286

கூட்டமாக மொய்த்த ரசிகர்கள்… நடிகையைக் காப்பாற்றி பத்திரமாக அழைத்துச் சென்ற தனுஷ்

நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் நேற்று வெளியாகி பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

நேற்று வெளியான தன்னுடைய திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை தனுஷ் சென்னையின் பிரபல திரையரங்குக்கு சென்று பார்த்தார். அவரோடு படத்தின் நாயகி ராஷி கண்ணாவும் படத்தைப் பார்த்தார். படம் முடிந்து வெளியேறிய போது ரசிகர்கள் கூட்டம் கட்டுப்பாட்டை இழந்து இருவரையும் நெருங்கினர்.

பவுன்ஸர்களாலும் ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் நடிகர் தனுஷ் ராஷிகண்ணாவை கூட்டத்திடம் இருந்து காப்பாற்றி பத்திரமாக தன்னுடைய காரில் ஏற்றி அழைத்துச் சென்றார். இது சம்மந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தனுஷ், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் நேற்று வெளியான திருச்சிற்றம்பலம். படத்தை இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ளார். திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷுக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என்று இப்போதே சொல்லப்பட்டு வருகிறது.

படத்தில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோரின் நடிப்பு பாராட்டப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக படத்தில் ரசிகர்களைக் கவர்ந்தது நித்யா மேனன்தான். இந்த படத்துக்குக் கிடைத்து வரும் வரவேற்புக்கு மத்தியில் சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றில் ரசிகர்கள் பாடலுக்கு ஆடும் போது திரையைக் கிழித்த தேவையிலலாத சம்பவமும் நடந்துள்ளது.

Previous articleஎதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது… டிரைலர் எப்போது?
Next articleமதிப்பூதியம் பெறுவோருக்கு கூடுதல் தொகையா? தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here