ரஜினியின் ஹிட்படத்தின் பார்ட் 2 ல் தனுஷ் : ஜோடியாக கீர்த்தி சுரேஷ் !

Photo of author

By Parthipan K

ரஜினியின் ஹிட்படத்தின் பார்ட் 2 ல் தனுஷ் : ஜோடியாக கீர்த்தி சுரேஷ் !

ரஜினி நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளியான நெற்றிக்கண் படத்தின் பார்ட் 2 வில் தனுஷ் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இப்போது கதைப்பஞ்சம் அதிகளவில் உள்ளது. அதனால் கதைத் திருட்டு பிரச்சனைகள் ஒருப்பக்கம் எழ, மற்றொரு பக்கம் ரீமேக் மற்றும் பார்ட் 2 படங்களும் வரிசைக் கட்டி உருவாகி வருகின்றன. ஆனால் அவை எதிர்பார்த்தபடி வெற்றி பெறுகின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இந்நிலையில் ரஜினி, சரிகா மற்றும் மேனகா நடிப்பில் கடந்த 1981 ஆம் வருடம் வெளியான படம் நெற்றிக்கண். இரு வேடங்களில் நடித்த ரஜினி ஒரு கதாபாத்திரத்தில் ஏக பத்தினி விரதனாகவும் மற்றொரு கதாபாத்திரத்தில் பெண் பித்தனாகவும் நடித்திருந்தார். இந்த படத்தை ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கி இருந்தார்.

இந்த படம் மிகப்பெரிய ஹிட்டானது. படம் வெளியாகி 39 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். (முதல் பாகத்தில் நடித்தது அவரது தாயார் மேனகா).

இந்தப் படத்தை யார் இயக்குவது மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்பது குறித்த விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.