தனுஷ் மீது காண்டான அஜித் ரசிகர்கள்! – டுவீட்ஸ் உள்ளே….

Photo of author

By Parthipan K

தனுஷ் மீது காண்டான அஜித் ரசிகர்கள்! – டுவீட்ஸ் உள்ளே….

Parthipan K

அஜித் ரசிகர்கள் நேற்று இரவிலிருந்து நடிகர் தனுஷை கலாய்த்து, அவருக்கு எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

நேற்று துபாயில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோணி தலைமையில் 27 ரன் வித்தியாசத்தில் நான்காவது முறையாக ஐபில் கோப்பையை வென்றது.

பொதுவாக CSK கேப்டன் தோனியை எல்லோரும் ‘தல’ என்றும் சுரேஷ் ரைனாவை ‘சின்ன தல’ என்றும் அழைப்பர்.

கோலிவுடை பொறுத்த வரை தல என்பது நடிகர் அஜித்தின் புனைப்பெயராகும். அஜித் ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படுகிறார்.

CSK நேற்று வெற்றியடைந்ததை கொண்டாடும் விதமாக ரசிகர்களும், நட்சத்திரங்களும் இணையத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

நடிகர் தனுஷ் தனது டீவீட்டில் One and only thala என்று MS தோனியை புகழ்ந்திருந்தார். இதுவே இந்த பிரச்சனைக்கு காரணமாகும்.

அவர் குறிப்பிட்டிருந்த One and only thala அஜித் ரசிகர்களை கடுப்பேற்றவே தற்போது அவர்கள் தனுஷுக்கு எதிராக ட்வீட் செய்து வருகின்றனர்.