ஒரே நாளில் தனுஷின் இரண்டு படங்களின் டைட்டில் வெளியிட திட்டமா?

0
161

ஒரே நாளில் தனுஷின் இரண்டு படங்களின் டைட்டில் வெளியிட திட்டமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் ஒரே ஷெட்யூலில் முடிந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஒரு சில பேட்ச் வொர்க் பணிகள் மட்டும் இன்னும் ஒரு வாரம் நடைபெற இருக்கும் நிலையில் அதனை அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வரும் டிசம்பர் முதல் ‘பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் அதனை அடுத்து ராஜஸ்தான், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் டைட்டிலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் டைட்டிலையும் ஒரே நாளில் வெளியிட தனுஷ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவலின்படி தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு ’சுருளி’ என்று டைட்டிலும், தனுஷ்-மாரி செல்வராஜ் படத்திற்கு ‘கர்ணன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தனுஷ் நடித்த அசுரன் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் அவர் நடித்து முடித்து நீண்ட நாள் கிடப்பில் இருந்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅண்ணன் பிரதமர், தம்பி அதிபர்: இலங்கையில் பெரும் மாற்றம்!
Next articleதேசிய கட்சிகளுக்காக தனது முடிவில் இருந்து பின்வாங்கிய இந்திய தேர்தல் ஆணையம்