சன் டிவி நேர்காணலுக்கு மறுத்தாரா தனுஷ்… பின்னணி என்ன?

Photo of author

By Vinoth

சன் டிவி நேர்காணலுக்கு மறுத்தாரா தனுஷ்… பின்னணி என்ன?

Vinoth

சன் டிவி நேர்காணலுக்கு மறுத்தாரா தனுஷ்… பின்னணி என்ன?

திருச்சிற்றம்பலம் படத்தின் எதிரபாராத வெற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு தனுஷுடன் இயக்குனரும் அவரின் நண்பருமான மித்ரன் இணைந்து உருவாக்கியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெற்றிக்கூட்டணியின் அடுத்த வெற்றியாக அமைந்துள்ளது. ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் & அனிருத் கூட்டணியும் இந்த படத்தில் இணைந்துள்ளது.  ரிலீஸூக்கு முன்பே பாடல்கள் ஹிட்டாகி ரசிகர்களைக் கவர்ந்தன.

இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இலலாமல் சென்ற ரசிகர்களுக்கு நல்ல பீல்குட் படத்தைப் பார்த்த உணர்வு கொடுத்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூலைக் குவித்துள்ளது. முதல் நாளிலேயே 9 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. தனுஷின் சமீபத்தைய படங்களில் திருச்சிற்றம்பலம்தான் அவருக்கு வெற்றியைக் கொடுத்த படமாக மாறியுள்ளது.

இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் எப்படி ரசிகர்களுக்கு எப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லையோ, அதுபோல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கும் படத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லையாம். அதனால் படத்துக்கு பெரியளவில் பப்ளிசிட்டி எதுவும் செய்யவில்லை என்று சொல்லபடுகிறது. இதனால் தயாரிப்பு தரப்பு மீது தனுஷ் அதிருப்தியில் இருந்துள்ளார்.

இதையடுத்து இப்போது படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றுள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் படத்திக்கு எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்க தனுஷின் நேர்காணல் எடுத்து அதை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பலாம் என திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கு தனுஷ் மறுத்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது.