தனுஷின் ‘வாத்தி’ அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்… ரிலீஸ் எப்போது?

தனுஷின் ‘வாத்தி’ அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்… ரிலீஸ் எப்போது?

தனுஷின் முதல் நேரடி தெலுங்குப் படமான ‘வாத்தி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர் முதல்முறையாக நேரடி தெலுங்குப் படமான வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். கென் கருணாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் இன்று படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. நாளை படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் தற்போது பரவி வருகிறது.

படத்தை தீபாவளி சமயத்தில் அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment