வாத்தி படத்தின் தமிழக ரிலீஸை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்… ரிலீஸ் எப்போ?

Photo of author

By Vinoth

வாத்தி படத்தின் தமிழக ரிலீஸை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்… ரிலீஸ் எப்போ?

Vinoth

வாத்தி படத்தின் தமிழக ரிலீஸை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்… ரிலீஸ் எப்போ?

வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் நடிகர் தனுஷ்.

நடிகர் தனுஷ் முதல்முறையாக நேரடி தெலுங்குப் படமான வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். கென் கருணாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் அபரிமிதமான வெற்றியால் தனுஷின் அடுத்தடுத்த படங்களின் ரிலீஸ் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்து வாத்தி மற்றும் நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் வாத்தி படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதே போல நானே வருவேன் திரைப்படத்தில் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அன்புச்செழியன் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் உரிமையையும் கைப்பற்றி தீபாவளிக்கு வெளியிட உள்ளார்.

விரைவில் வாத்தி படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. சில ஆண்டுகளாக தோல்வி படங்களாகக் கொடுத்து வந்த தனுஷ் அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுக்க ரெடியாகியுள்ளார்.