தனுஷ், விஷால், சிலம்பரசன் ஆகியோர்களுக்கு ரெட் கார்டு கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்!!! ஏன் இந்த திடீர் முடிவு!!?

0
140
#image_title

தனுஷ், விஷால், சிலம்பரசன் ஆகியோர்களுக்கு ரெட் கார்டு கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்!!! ஏன் இந்த திடீர் முடிவு!!?

நடிகர்கள் தனுஷ், விஷால், சிலம்பரசன், அதர்வா ஆகியோர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை கூட்டத்தில் ரெட் கார்ட் கொடுப்பதாக முடிசெய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் அவர்கள் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுனம் சார்பாக முரளி தயாரிக்கும் திரைப்படத்தில் நடித்து வந்தார். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் வேறொரு திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் கவனம் செலுத்தி நடித்து வந்தார். இதனால் தனக்கு நஷ்டம் ஏற்படுவதாக தயாரிப்பாளர் முரளி அவர்கள் புகார் அளித்திருந்தார். நடிகர் தனுஷ் அவர்களுடன் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் நடிகர் தனுஷ் ஒத்து வராததால் நடிகர் தனுஷ் அவர்களுக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது.

அதே போல நடிகர் விஷால் அவர்கள் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த பொழுது நடிகர் சங்கத்தின் பணத்தை எடுத்து செலவு செய்ததாகவும் முறையாக கணக்கு வழக்கு வைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் நடிகர் விஷால் அவர்களுக்கும் நடிகர் சங்கம் ரெட்கார்ட் கொடுத்துள்ளது.

நடிகர் சிலம்பரசன் அவர்களின் மேல் தயாரிப்பாளர் ராயப்பன் அவர்களும், நடிகர் அதர்வா அவர்களின் மேல் தயாரிப்பாளர் மதியழகன் அவர்களும் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் நடிகர் அதர்வா, நடிகர் சிலம்பரசன் ஆகிய இருவர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கம் ரெட்கார்ட் வழங்கியுள்ளது.

 

Previous articleமாணவ மாணவிகளுக்கு வெளிவந்துள்ள முக்கிய அறிவிப்பு!! நாளை இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நேரம் மாற்றம்!!
Next articleபராசக்தி பட்டம் இல்லை என்றால் என் வெற்றி படங்கள் இல்லை : பிரபல இயக்குனர் ஓபன் டாக்!!