சூப்பர் ஸ்டாரோடு இணைந்த தனுஷ் – பாலிவுட்டில் அடுத்த இன்னிங்ஸ் !

Photo of author

By Parthipan K

ரஜினியின் வில்லனோடு நடிக்கும் தனுஷ் – பாலிவுட்டில் அடுத்த இன்னிங்ஸ் !

இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கும் புதிய படத்தில் தனுஷுடன் அக்‌ஷய் குமார் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டில் ’கான்’ சூப்பர் ஸ்டார்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் அக்‌ஷய் குமார். இவர் நடிக்கும் படங்கள் வரிசையாக ஹிட்டடித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார்.

இந்நிலையில் இப்போது ரஜினியின் மருமகன் தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தில் அவருடன் இணைந்து நடிக்க இருக்கிறார் அக்‌ஷய். இந்த படத்தை தனுஷின் பாலிவுட் அறிமுகப் படமான ராஞ்சனாவை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்க இருக்கிறார்.

சாயிப் அலிகானின் மகள் சாரா அலிகான் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ஹ்ருத்தி ரோஷன் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்காததால் அந்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்க இருப்பதாகத் தெரிகிறது.

பாலிவுட்டில் ஷமிதாப் படம் தோல்வி அடைந்ததை அடுத்து தனுஷ் இந்தி படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். ஆனால் இப்போது வலுவான கதையம்சம் கொண்ட படம் என்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் பெயர் மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரம் இன்னும் வெளியாகவில்லை. திறமையான நடிகர்கள் இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.