அடுத்தடுத்து தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் படங்கள்!! போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கு!!

0
111
Dhanush's upcoming films!! The list is too long!!
Dhanush's upcoming films!! The list is too long!!

அடுத்தடுத்து தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் படங்கள்!! போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கு!!

நடிகர் தனுஷ்  திரைத்துறையின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் ஆரம்ப காலக்கட்டத்தில்  எதார்த்தமான முகம், மெல்லிய உடல் தோற்றத்துடன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிபடுத்தினார்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் தனது புகழ் பெற்று இருந்தார் பின்பு அதனை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்துகிறார்.

அந்த வகையில் தற்பொழுது தனுஷ் அவர்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்னும் திரைபடத்தில் நடித்து வருகின்றார்.இந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் பழங்கால வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.மேலும் இந்த படம் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.இதனால் தனுஷின் சம்பளம் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

அதனால் இந்த படத்திற்கு தனுஷிற்கு மட்டும் சுமார் 20 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. சமீபத்தில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

அந்த வகையில் தனுஷ் அவர்களின் 50 வது படத்தை அவரே இயக்கி அவரே நடிக்க உள்ளார் என்றும் இந்த படம் முழுவதும் தலையில் முடி இல்லாமல் மொட்டையுடன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்ததாக தற்பொழுது ஜெயிலர் படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் நெல்சன் அவர்களுடன் தனுஷ் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

அந்த வகையில் தனுஷ் நடித்து முடித்துள்ள தி கிரே மென் படத்தின் இரண்டாம் பாகம் சைலண்டாக உருவாக்கி கொண்டு இருபதாக தகவல் வெளியாகி உள்ளது.

Previous articleதிடீரென வானில் தோன்றிய பறக்கும் தட்டுகள்!! ஏலியன்கள் நோட்டமிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல்!!
Next articleமேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! கேள்விகளால் துளைத்தெடுத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்!!