1 லட்சம் பணத்துடன் சென்று பல்பு வாங்கிய தருமபுரி எம்பி! கடும் அதிருப்தியில் திமுக தலைமை! நடந்தது என்ன? போராளி குடும்பம் விளக்கம்
காலம் காலமாக வன்னியர்களுக்கு கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் உரிய முக்கியத்துவம் வழங்காமல் தொடர்ந்து ஆட்சியாளர்கள் புறக்கணித்து வருவதால் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக மருத்துவர் ராமதாஸ் போராட்டத்தை அறிவித்துள்ளார்.இதனையடுத்து பல்வேறு விதங்களில் இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுகவின் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் செந்தில்குமார் வழக்கம் போல வன்னியர் வாக்குகளை குறி வைத்து பாமகவை சீண்ட எதிர்பாராதவிதமாக அவரே சிக்கலில் மாட்டி கொண்டுள்ளார்.
இது குறித்து தருமபுரி தொகுதி மக்களிடம் விசாரிக்கையில்,நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற பிரச்சாரத்தில் திமுகவின் சார்பாக பாமகவின் அன்புமணி ராமதாசை எதிர்த்து போட்டியிட்ட செந்தில்குமார் வடிவேல் கவுண்டர் பேரனாகவும் ,நானும் அன்புமணியும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் என்றும் சாதியை வைத்து பிரச்சாரம் செய்தார். மேலும் அந்த தேர்தலில் லாஜிக் எதுவும் இல்லாமல் திமுக கொடுத்த பொய்யான வாக்கு உறுதிகளான விவசாய கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி என்பதையும் பயன்படுத்தி நாடாளுமன்ற தேர்தலில் பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணியை அவர்களை வீழ்த்தி அவர் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து வெற்றி பெற்ற இவர் நாடாளுமன்றத்தில் உறுதி மொழி எடுக்கும் போது பெரியார் வாழ்க , அம்பேத்கர் வாழ்க, கருணாநிதி வாழ்க என்று சாதி ஒழிப்பு கருத்துக்களை தெரிவித்து அந்தர் பல்டி அடித்தார்.தேர்தலுக்கு முன்பு வரை சாதி அடிப்படையில் வடிவேல் கவுண்டர் பேரன் என்று திரும்ப திரும்ப பேசி வந்த செந்தில்குமார் எம்.பி வெற்றி பெற்ற பின்பு திடீரென பெரியார் பேரனாக மாறிவிட்டது. தருமபுரி தொகுதி மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்குள்ளானது.
மேலும் அதன்பிறகு தருமபுரி மக்கள் கொடுத்த வெற்றிக்கு களத்தில் இறங்கி மக்களுக்கு சேவை செய்யாமல் தொடர்ந்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் மட்டுமே தனது பொழுதை கழித்து கொண்டு இருந்தார்.குறிப்பாக ஒரு கட்டத்தில் பாமக,மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரை விமர்சனம் செய்வதையே முழு நேர தொழிலாக கொண்டு செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அதே நேரத்தில் இவர்களை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் ட்விட்டரில் தொடர்ந்து தமிழில் பிழைகளுடன் பதிவிட்டு தமிழ் ஆர்வலர்களிடம் வாங்கி கட்டிகொண்டார். ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு பொது நிகழ்சிகளில் உளறி கொட்டி அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் தன் தலைவரை போல செந்தில்குமார் எம்பியும் தமிழை ஒழுங்காக எழுத முடியாமல் மிக பெரிய விமர்சனத்துக்கு உள்ளானார்.இவர் எப்படி தான் டாக்டருக்கு படித்தாரோ,எதற்காக எம்பி ஆனாரோ என்று மக்களுக்கு கேள்வி எழும் வகையில் இவருடைய செயல்பாடுகள் இருந்தது.
இந்நிலையில் எப்போதும் பாமகவையும் அன்புமணி மற்றும் ராமதாஸ் அவர்களையும் தொடர்ந்து ட்விட்டரில் கிண்டல் அடித்தும், சில நேரங்களில் அரசியல் நாகரிகமற்று கொச்சையாகவும் பதிவு செய்தும் தன்னுடைய காலத்தை கழித்து கொண்டு இருந்தார்.அப்போதிலுருந்து இவருக்கும் பாமக தொண்டர்களுக்குமிடையே ட்விட்டரில் கடும் வாக்குவாதம் நடந்து கொண்டேயிருக்கும்.இவரை எதிர்த்து பாமகவினர் யாரேனும் டுவிட் செய்தால் அதற்கு உரிய பதில் கொடுக்காமல் உடனடியாக அவரை பிளாக் செய்வது இவருடைய வழக்கமாகவும் இருந்தது.ஒரு கட்டத்தில் இரு தரப்பும் மாறி மாறி வழக்கு தொடுக்கும் நிலையம் ஏற்பட்டது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு வன்னியர்களின் அடையாள சின்னமான வன்னியர் கலசத்தை இழிவாக பேசியதால் தருமபுரி வன்னியர் மக்களின் கடும் கோபத்துக்கு மீண்டும் ஆளானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தொடர்ந்து தருமபுரி மக்களின் கடும் கோபத்துக்கு ஆளான தருமபுரி எம்.பி. விரைவில் சட்டமன்ற தேர்தல் வருவதாலும், பாமக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு செய்யும் போராட்டத்திற்கு கட்சி பாகுபாடின்றி மொத்த திமுக வன்னியர் இளைஞர்களும் ஆதரவு தர தொடங்கியதாலும் தலைமை கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படியே போனால் தருமபுரியில் திமுக டெபாசிட் கூட வாங்காது என்பதை உணர்ந்த திமுக தலைமை அக்கட்சியின் அரசியல் ஆலோசகரான பிராந்த கிஷோரின் ஆணையின் படி இந்த விவகாரத்தை திசை திருப்ப திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தான் நத்தமேட்டில் உள்ள வன்னியர் சங்கத்தை சேர்ந்த இட ஒதுக்கீடு போராளி குடும்பத்தை சந்தித்து பணம் கொடுக்க தருமபுரி எம்பி செந்தில்குமார் முயற்சித்தார்.இதன் மூலமாக ஏற்கனவே தன்னுடைய செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த வன்னிய மக்களையும்,தனது சொந்த கட்சியினரையும் சமாதான படுத்திவிடலாம் என்று திட்டமிட்டுள்ளார்.
ஆனால் அங்கு நடந்ததோ வேறு தனியாக போனால் மக்கள்யிடம் சிக்கி கொள்வோம் என்று உணர்ந்து திமுக ரவுடிகளுடனும், சில போலிஸ் அதிகாரிகளுடன் அந்த பகுதிக்கு சென்றுள்ளார்.ஆனால் அங்கு சென்ற அடுத்த சில நிமிடத்திலேயே அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளனர் அந்த பகுதி மக்கள்.
இத்தனை வருடம் இல்லாத அக்கறை இப்போது ஏன்? இப்போ எதற்கு இட ஒதுக்கீடு போராளி குடும்பத்தை பார்க்கவந்தீர்கள்? என்றும், வன்னியர் மக்களின் தனி இட ஒதுக்கீடு போராட்டம் நடத்த போது ஏன் ஆதரவு தரவில்லை என்றும், சில ஆபச வார்த்தைகளாலும் அப்பகுதி மக்கள் அவருக்கு எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.பின்பு வழக்கம்போல் போல இந்த நிகழ்விற்கு காரணம் மருத்துவர் ராமதாஸ் தான் என செய்தியாளர்களிடம் குற்றம்சாற்றியுள்ளார்.மேலும் இதோ என்னிடம் ஒரு லட்சம் பணம் உள்ளது. இதை எப்போ வேணாலும் இட ஒதுக்கீடு குடும்பம் வந்து வாங்கி கொள்ளலாம் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் நான் வருவதை தெரிந்து பாமகவினர் தான் இட ஒதுக்கீடு போராளி குடும்பத்தை கடத்தி விட்டார்கள் என்றும் வதந்தியை கிளப்பி விட்டு மக்கள் மத்தியில் சிம்பதியை உருவாக்கினார்
ஆனால் இதை சம்பந்தப்பட்ட இட ஒதுக்கீடு போராளி குடும்பம் முழுமையாக மறுத்துள்ளது.நாங்கள் யாராலும் கடத்தப்பட்டவில்லை.எங்களை ஏற்கனவே பாமகவும்,மருத்துவர் ராமதாஸ் அவர்களும் நன்றாகவே பார்த்துக் கொள்கிறார்கள். உங்களுடைய பணம் எங்களுக்கு தேவையில்லை என்றும், பணம் கொடுக்க வந்த திமுக எம்பியை உதாசினபடுத்தி உள்ளதாகவும் கூறுகின்றனர்.
இவ்வாறு எதாவது செய்து விளம்பரத்தை தேடும் திமுக எம்பி செந்தில்குமார் இந்த சம்பவத்தின் மூலம் வன்னிய சமுதாயத்தினரிடையே கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார்.எடுத்த வேலையை ஒழுங்காக செய்யாததால் திமுக தலைமையும் இவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.