மீண்டும் ஒரு எட்டு வழிச்சாலையா? தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரை கேள்விகளால் துளைத்தெடுக்கும் சமூக ஆர்வலர்கள்!

0
203

மீண்டும் ஒரு எட்டு வழிச்சாலையா? தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரை கேள்விகளால் துளைத்தெடுக்கும் சமூக ஆர்வலர்கள்!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிகம் கவனிக்கப்பட்ட தொகுதியான தருமபுரியில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை எதிர்த்து போட்டியிட்டு திமுகவை சேர்ந்த டாக்டர் செந்தில்குமார் வெற்றி பெற்றார்.

அவர் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற நாளிலிருந்தே அவர் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவரும் மக்களுடன் எளிமையாக பழகுவது மற்றும் தொகுதியில் உள்ள சிறிய பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என ஆக்க பூர்வமான செயல்பாடுகளில் தான் ஈடுபட்டு வருகிறார்.

என்ன தான் அவர் இப்படி ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபட்டு வந்தாலும் அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதும் தற்போதைய அவருடைய செயல்பாடுகளும் முரணாக உள்ளதால் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.ஏற்கனவே தானும் அன்புமணியின் சமூகத்தை சேர்ந்தவர் தான் என பிரச்சாரத்தில் பேசி சாதி ரீதியான அரசியலை முன்னெடுத்து விட்டு வெற்றி பெற்ற பின் சாதி பெயரை சொல்லி கொண்டு யாரும் என்னை பார்க்க வரக் கூடாது என்று கூறியது,நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற போது தான் ஒரு திராவிடன் என பேசியது என அனைத்தும் அவர் சார்ந்த கட்சியின் கொள்கைகளுக்கும் இவர் முன்பு பேசியதற்கும் முரண்பாடாக இருந்ததால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.

அந்த வகையில் தருமபுரி எம்பி செந்தில்குமார் தற்போது புதிய சிக்கலில் மாட்டியுள்ளார். சமீபத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து சேலம்-தருமபுரி வழியிலான சாலையை எட்டு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை-சேலம் எட்டு வழிச்சாலையை எதிர்த்து குரல் கொடுத்துவரும் சூழ்நிலையில் இவர் மற்றுமொரு எட்டு வழிச்சாலை வேண்டும் என்று கேட்டுள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்த்ததும், தற்போது தருமபுரி தொகுதியை சேர்ந்த திமுக எம்பி.டாக்டர் செந்தில்குமார் கேட்பதும் வேறு சாலைகள் என்றாலும் ஏற்கனவே திட்டமிட்ட சாலையையே எதிர்த்து வரும் சூழலில் மீண்டும் ஒரு எட்டு வழிச்சாலையை கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் திமுக எம்பி.செந்தில்குமாரை கேள்விகளால் துளைத்தெடுத்து வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.இதற்கு முன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த அன்புமணி ராமதாஸ் சென்னை சேலம் இடையேயான எட்டு வழிச்சாலை அந்த பகுதி விவசாயிகளுக்கு எதிரானது என நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையாணை பெற்றுள்ள நிலையில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செந்தில்குமார் மீண்டும் ஒரு எட்டு வழிச்சாலையை வேண்டி கோரிக்கை விடுத்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleமக்களை வதைக்கும் முக்கிய பிரச்சனையில் சரியான சமயத்தில் உதவிய தமிழக அரசு!
Next articleதிருட்டுத்தனமான திருமணத்தால் தில்லை புனிதத்தலத்தை தீட்டாக்கிய தீட்சிதர்கள்