தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் நோய் தொற்று இரண்டாவது பரவாமல் இருப்பதற்காக மே மாதம் 24ஆம் தேதி அதாவது இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், பல கட்டுப்பாடுகள் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ பணியாளர்கள் ஊடக துறையினர், அதோடு வேளாண் பணிகள் மற்றும் அவை சார்ந்த தொழிற்சாலைகள் என்று ஒரு சிலருக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் விதிவிலக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த ஊரடங்கு காலங்களில் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இருந்தாலும் நாள்தோறும் ஆதரவில்லாமல் கிடைத்த வேலையை செய்து வரும் பல பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆதரவற்றோருக்கு தமிழக அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்ற பலரும் உதவி புரிந்து வருகிறார்கள்.
மக்கள் பணியில் தொடர்ந்து 10-வது நாளாக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் #மக்கள்MLA அண்ணன் #SPவெங்கடேஸ்வரன் அவர்கள்.ஆதரவற்று பேருந்து நிலைகளில் சுற்றி திரிபவர்களுக்கு 10-வது நாளாக உணவு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கினார்!#மக்கள்MLA #lockdown2021 #DharmapuriMLA #களத்தில்_பாமக pic.twitter.com/E3v40uGAaS
— தகடூரான் 💛❤TN-29💛❤ (@itsThagadooran) May 24, 2021
அந்தவகையில், தருமபுரி பாட்டாளி மக்கள் கட்சி சார்ந்த சட்டசபை உறுப்பினர் வெங்கடேஸ்வரன் தளர்வுகளுடன் கூடிய நோய்த்தொற்று ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட தினங்களில் இருந்து நாள்தோறும் ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளிய பொதுமக்களுக்கு அவரால் முடிந்த வரையில் உதவியை தொடர்ச்சியாக செய்து வருவதாக சொல்லப்படுகிறது. தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையிலும் தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் ஆதரவற்றோரை நேரில் சந்தித்து உணவு பொருட்களை வழங்கி வருகின்றார்.