கொந்தளித்த திமுக!. அடி பணிந்த மத்திய அமைச்சர்!.. இதெல்லாம் தேவையா?..

Photo of author

By Murugan

கொந்தளித்த திமுக!. அடி பணிந்த மத்திய அமைச்சர்!.. இதெல்லாம் தேவையா?..

Murugan

stalin

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. இதன் மூலம் ஹிந்தியை திணிக்க பாஜக அரசு முயல்வதாக திமுக கூறி வருகிறது. ஏற்கனவே, மும்மொழிக் கொள்கையை அனுமதித்தால் மட்டுமே கல்வி தொடர்பான நிதியை வழங்குவோம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினர்.

இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. அப்போது, திருச்சி சிவா மற்றும் கனிமொழி போன்ற எம்.பி.க்கள் மும்மொழிக்கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். அவர்களுக்கு பின் பேசிய தர்மேந்திர பிரதான் ‘தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக தவறான பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது திமுகவினர் மிகவும் மோசமானவர்கள். அநாகரீகமானவர்கள். ஜனநாயகம் இல்லாதவர்கள்.. தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் மீது அக்கறை இல்லாதவர்கள். தமிழக மக்களிடம் அவர்கள் நேர்மையாக இல்லை’ எனவும் பேசியிருந்தார்.

இதில் கோபமடைந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தன்னை மன்னர் என எண்ணிக்கொண்டு ஆணவத்துடன் அவர் பேசி வருகிறார். நிதியை தராமல் ஏமாற்றுபவர்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களை பார்த்து அநாகரீகமானவர்கள் என பேசுவதா?’ என கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ஒருபக்கம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தர்மேந்திர பிரதானின் உருவ பொமையை திமுகவின் எரித்து தங்களின் எதிர்ப்பை காட்டினார்கள்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அடிபணிந்துள்ளார். தமிழக அரசை, தமிழக எம்.பி.க்களை, தமிழக மக்களை நாகரீகமற்றவர்கள் என நான் கூறினேன் என கனிமொழி சொல்கிறார். ஆனால், அப்படி நான் சொல்லவில்லை.இருந்தாலும் நான் பேசிய வார்த்தைகளை யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்’ என பேசியிருக்கிறார்.