காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி வெயிலில் அமர்ந்து இளம்பெண் தர்ணா!
தன்னுடைய காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னுடைய குழந்தையுடன் கையில் பெட்ரோல் பாட்டில் வைத்துக் கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணால் பரப்பரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்ட முகாம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் நடைபெற்றது.
இந்த நிலையில் அபிராமத்தைச் சேர்ந்த கவிதா என்ற இளம் பெண் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை கடந்த 2015-ஆம் ஆண்டு காதல் திருமணம் முடித்ததாகவும் பின்னர் இருவரும் கோயம்புத்தூரில் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் இருவருக்கும் நான்கு வயதில் மகன் உள்ள நிலையில் தன்னை விட்டு பிரிந்து கணவர் அவருடைய தாயார் உடன் இருந்ததாக இருந்து வருவதாகவும், இது குறித்து அங்கு சென்று கேட்ட இளம் பெண்ணை அவர்கள் மிரட்டுவதாகவும் கூறி இதுகுறித்து அபிராமம் காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டம் முகாமில் திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்துக் கொண்டு எஸ்பி அலுவலக வாயிலில் தனது குழந்தையுடன் கொளுத்தும் வெயிலில் அமர்ந்து அரை மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் போலீசார் அவரிடம் போராடி பெட்ரோல் கேனை பிடிங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அழைத்துச் சென்றனர்
இளம் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் கடும் வெயிலில் பெட்ரோல் கேனுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.