விராட் கோலி அளவுக்கு தோனியிடம் இது இல்லை.. கொந்தளித்த ரசிகர்கள்!! சரணடைந்த SRH வீரர்!!
கடந்த மார்ச் 22 அன்று தொடங்கப்பட்ட 17வது IPL சீசனில் பல மாற்றங்களை காண முடிந்தது.மொத்தம் 10 அணிகள் மோதிய இந்த IPL சீசனில் பலம் வாய்ந்த அணி என்று சொல்லப்படும் “மும்பை இந்தியன்ஸ்(MI)” மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் ஆளாக வெளியேறியது.இதனை தொடர்ந்து PBKS,GT,LSG.DC,CSK ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை தவற விட்டது.
ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB,RR வெளியேறிய நிலையில் KKR மற்றும் SRH அணிக்கான இறுதி போட்டி சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR) மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது.
மேலும் இந்த சீசனில் இறுதி போட்டி வரை முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(SRH) அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணியின் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி முக்கிய காரணமாவார்.13 போட்டிகளில் விளையாடிய நிதிஷ் 303 ரன்கள் குவித்ததோடு 3 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்.இவரின் சிறப்பான ஆட்டத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நிதிஷ் குமார் அவர்கள் தோனி குறித்த கேள்விக்கு சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பதில் அளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் படு வைரலானது.பேட்டியில் “தோனிக்கு திறமை இருக்கு.ஆனால் அவரிடம் டெக்னிக் இல்லை.அதாவது விராட் கோலி அளவிற்கு தோனியிடம் டெக்னிக் இல்லை” என்ற நிதிஷ் குமாரின் பேச்சால் தோனி ரசிகர்கள் கொதித்தெழுந்தனர்.சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பலரும் கண்டனப் பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.
தோனி குறித்த சர்ச்சை பேச்சு: நிதிஷ் குமார் ரெட்டி விளக்கம்
இந்நிலையில் தோனி குறித்த சர்ச்சை பேச்சு குறித்து நிதிஷ் குமார் விளக்கமளித்திருக்கிறார்.“நான் மகி பாயின் மிகப்பெரிய ரசிகன்.என்னிடம்,‘திறமை முக்கியமா? அல்லது மனநிலை முக்கியமா?’ எனக் கேள்வி கேட்கப்பட்டது.நான் மனநிலை தான் முக்கியம் என்று பதிலளித்தேன்.இதற்காக தோனியை உதாரணமாகக் கூறினேன்.ஒரு வெற்றியை தீர்மானிப்பதில் மனநிலை மிக முக்கிய பங்கு வகிப்பதாக நான் நம்புகிறேன்.
எனது முந்தைய பேட்டியில் நான் கூறியதை சிலர் முழுமையாக வெளியிடாமல் கத்தரித்து வெளியிட்டு வருகின்றனர்.தவறான விஷயங்களை பரப்ப வேண்டாம்.முழுக் கதையையும் கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள்” என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆதாரத்துடன் விளக்கமளித்திருக்கிறார்.