இவர்கள் வீடியோவைப் பார்த்தேன்; கே எல் ராகுலுக்கு எதிராக தோனி ரசிகர்கள் !

0
141

இவர்கள் வீடியோவைப் பார்த்தேன்; கே எல் ராகுலுக்கு எதிராக தோனி ரசிகர்கள் !

மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாட ஸ்மித் மற்றும் வில்லியம்சன் ஆகியோரின் வீடியோக்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டதாக சொன்ன கே எல் ராகுலுக்கு தோனி ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸியும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் ரிஷப் பண்ட் காயமடைந்ததால் கே எல் ராகுல் 5 ஆவது வீரராகக் களமிறங்கினார்.

வழக்கமாக தொடக்க ஆட்டக்காரராக இறங்கும் கே எல் ராகுல் 5 ஆவது இடத்தில் இறங்கி 52 பந்துகளில் 80 ரன்களை சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார். சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னைத் தகவமைத்துக் கொண்ட கே எல் ராகுலுக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன.

நடுவரிசையில் இறங்குவது குறித்து பேசிய கே எல் ராகுல் ‘நடுவரிசையில் சிறப்பாக விளையாட நியுசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும ஆஸியின் ஸ்மித் ஆகியோரின் வீடியோக்காளைப் போட்டு பார்த்தேன்.’ என ராகுல் கூறினார்.ராகுலின் இந்த பேச்சு தோனி சமூக வலைதளங்களில் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர்.

உலகிலேயே சிறந்த நடுவரிசை வீரர் என புகழப்படும் தோனி இருக்கையில் ஏன் ஸ்மித் வீடியோவையையும் வில்லியம்ஸன் வீடியோவையையும் பார்க்க வேண்டும். தோனி வீடியோ எல்லாம் பார்க்க மாட்டீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Previous articleதென் இந்தியாவில் தப்பித்த தர்பார் ! வட இந்தியாவில் மண்ணைக் கவ்வியது : கலக்கத்தில் விநியோகஸ்தர் !
Next articleசிறுமியிடம் அத்துமீறிய கணவன்; காப்பாற்ற நினைத்த மனைவி – போக்ஸோ சட்டத்தில் கைது !