ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பையை கதறவிட்ட சென்னை அணி! ருத்ரதாண்டவம் ஆடிய தல தோனி!

0
112

ஐபிஎல் தொடரின் 33வது போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும். சந்தித்தனர் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன், உள்ளிட்டோர் களம் புகுந்தனர்.

மேலும் இருவரும் வந்த வேகத்தில் ரன் எதுவும் எடுக்காமல் நடையை கட்டினர். இதனையடுத்து களமிறங்கிய டீவல்டு ப்ரீவிஸும் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து மும்பை அணி தடுமாறி வந்தது. இதனை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 32 ரன்களை எடுத்தார்.

இதனையடுத்து மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை மட்டுமே சேர்த்தது. சென்னை அணியின் சார்பாக முகேஷ் 3 விக்கெட்டுகளையும், பிராவோ 2 விக்கெட்டுகளையும், கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, உள்ளிட்டோர் களம்புகுந்தனர். ருதுராஜ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியை வழங்கினார். அவரை தொடர்ந்து களம் புகுந்த மிட்சல் 11 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதற்கிடையில், ஷிவம் துபே 13 ரன்னில் வெளியேறினார் மறுபுறம் மிகவும் சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு 40 ரன்னில் அவுட்டானார். கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 17 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரை உனத்கட் வீசினார். அப்போது ஸ்டிரைக்கில் இருந்தவர் ட்வைன் ப்ரிட்டோரியஸ்

எதிர்முனையில் தோனி நின்றிருந்தார் முதல் பந்திலேயே பிரிட்டோரியஸ் ஆட்டமிழக்க, ஆட்டம் மும்பை அணிக்கு சாதகமாக இருந்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய பிராவோ 2வது பந்தில் ஒரு ரன் எடுக்க தோனி ஸ்ட்ரைக்குக்கு வந்தார்.

4 பந்தில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 3வது பந்தில் சிக்ஸ் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் தோனி. மேலும் நான்காவது பந்து பவுன்சராக வந்த சூழ்நிலையில், அதனை லாவகமாக தோனி பவுண்டரிக்கு அனுப்பினார்.

2 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில். 5வது பந்தில் 2 ரன்கள் சேர்த்தார். தோனி கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில், பவுண்டரி அடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார் தோனி. இதனைத்தொடர்ந்து தோனி தான் எப்போதும் சிறந்த பினிஷர் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Previous articleநடிகர் சூரி வழங்கிய புகார்! பிரபல நடிகரின் தந்தைக்கு வந்த சிக்கல்!
Next articleஅடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 5 மாவட்டங்களில் மிதமான மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!