இயக்குனர்கள் அனைவரும் இவரை பார்த்து இப்படி கூறி விட்டார்களே? திரையுலகினர் அதிர்ச்சி!

0
153
Did all the directors look at him and say this? The film industry is shocked!
Did all the directors look at him and say this? The film industry is shocked!

இயக்குனர்கள் அனைவரும் இவரை பார்த்து இப்படி கூறி விட்டார்களே? திரையுலகினர் அதிர்ச்சி!

திரையுலகில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். முதலில் சர்ச்சைக்குரிய படங்களில் நடித்த வந்த நிலையில் தற்போது குடும்பப்பாங்கான கதைகளிலும் நடித்து வருகிறார் ஜீவி. அனைத்து இயக்குனர்களிடமும் ஜீவி எப்பொழுதும் அமைதியாகவும் அனைவரிடமும் எதார்த்தமாக பழகும் குணம் கொண்டவர் என நல்ல பெயரை பெற்றுள்ளார்.

இவர் நடிக்கும் அனைத்து படங்களிலும் எப்பொழுதும் சம்பளம் குறைவாகவே வாங்குவார். புதுமுக இயக்குனர்களின் முதல் தேர்வாக ஜீவிதான் உள்ளார் என்றும் பேசப்பட்டு வருகிறது. ஜிவி பிரகாஷிடம் அனைத்து இயக்குனர்களும் நண்பர் போல் அடிக்கடி வந்து கதைகளை சொல்லிவிட்டு செல்வார்கள் என்றும் பேசப்படுகிறது.

இவர் எந்த படத்தில் நடித்தாலும் அந்த படத்தில் நஷ்டம் ஏற்படுவதில்லை லாபம் மட்டுமே ஏற்படுகிறது என இயக்குனர்கள் கூறுகின்றார்கள். இயக்குனர்கள் யாராவது கதை கூறினால் மறுப்பு தெரிவிக்காமல் உடனடியாக கமிட் ஆகி விடுவார். அப்படி நடிக்க முடியாத சூழ்நிலையின் பொழுது மற்றொரு நடிகரை பரிந்துரை செய்வார் என கூறுகின்றார்கள்.

தற்போது பூபதி பாண்டியனிடம் சென்று ஒரு காமெடி படம் எடுக்கலாம் என்றும் கதை கேட்டு வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பூபதி பாண்டியன் காமெடி படம் இயக்குவதில் வல்லவர். இந்நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் பூபதி பாண்டியன் இருவரும் இணைந்து காமெடி படம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.இயக்குனர்கள் அனைவரும் இப்படி கூறுவதை கேட்டு ஜி.வி பிரகாஷ்னின்  ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Previous articleமகாத்மா காந்தி சிலை அருகே தனியார் மதுபான கடையா? காவல்துறைக்கு நாங்கள்  கல்லா கட்டுகிறோம்! ஒயின்ஷாப் உரிமையாளர் திமிர் பேச்சு! 
Next articleபழிக்கு பழியாக கொலை முயற்சி! கூலிப்படையின் கொட்டம் அடக்கிய காவல் துறை.!!