“அவன் தான் பாடினானா? அதை நீ பார்த்தாயா?” என ஜிவி பிரகாஷை எதிர்த்து குரல் கொடுத்த இயக்குனர்!!

0
121

இசை ஜாமவான்கள் மத்தியில் திரையுலகில் தனக்கென்று, ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் ஜி.வி.பிரகாஷ்’. இவர் பிரபல இசையமைப்பாளர் ‘ஏ.ஆர் ரகுமானின் சகோதரி மற்றும் பின்னணி பாடகியான ஏ.ஆர். ரெஹானா மற்றும் ஜி. வெங்கடேஷ் ஆகியோரின் ஒரே மகன் ஆவார்’.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் படிக்கும் போது, தான் கணினி சம்பந்தப்பட்ட அதிகாரியாக வேண்டும் என எண்ணினார். அப்படி இருக்க, ஏ.ஆர். ரகுமான் அறிவுரையில் தான் இவர், “குச்சி குச்சி ராக்கம்மா, சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு” போன்ற பாடல்களில் முதலில் உள்ள குழந்தைகளுக்கான பாடல் வரிகளைப் பாடியுள்ளார்’. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது இவர் இசைத்த

கீ-போர்டு இசையின் மூலம் ‘பெஸ்ட் இன்ஸ்ட்ருமன்டலிஸ்ட்’ என்ற விருதை பெற்றார். இதுவே இவர் இசையின் மீது கவனத்தை செலுத்திய நேரம். அதைத்தொடர்ந்து இவர், படிப்பை நிறுத்திவிட்டு இசையில் முழு கவனத்தை செலுத்தினார்.

முதலில் விளம்பரங்களுக்கு இசையமைப்பது போன்ற வேலைகளை செய்து வந்தார். அதன் பின் தான், ‘இசையமைப்பாளராக வெயில் படத்தின் மூலம் அறிமுகமானார்’. இவரது முதல் படத்திலியே இவரது பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

 

இவர் அடுத்தடுத்து ஹிட் கொடுத்த சில படங்களாவது :

கிரீடம், பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன, குசேலன், தாண்டவம், சூரரைப் போற்று, அசுரன். மேலும் பல படங்களில் தனது இசையை, திறமையாக வெளிப்படுத்தி இருப்பார்.

 

இவர் முதல் முதலாக ‘காதல்’ படத்தில் தான் பாடல்கள் அமைக்க இருந்தது. ஆனால் அப்படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல், ‘எப்படியாவது கஷ்டப்பட்டு மேலே வந்து விட வேண்டும் என எண்ணுகிறாயா?’ என கேட்டதற்கு இவர் ஓபன் ஆக, ‘அப்படியெல்லாம் இல்லை சார்’ என அதிருப்தி அளித்துள்ளார்.

இதனால் ‘காதல் படத்தில் இவர் கமிட்டாகவில்லை’. பிறகு வெயில் படத்தில் பாடல் இயற்றி அவைகள் ஹிட்டானது. அப்பொழுது பாலாஜி சார், வெயில் பட இயக்குனர் வசந்த பாலனிடம் ஜீ.வி தான் பாடினாரா? நீ அதை உன் கண்ணால் பார்த்தியா? என்றெல்லாம் கேட்டுள்ளார். இதைப் பற்றி வசந்தன் சார் கூறுகையில், எனக்கு சிரிப்பு தான் வந்தது என்றார் ஜீ.வி.

Previous articleசித்தப்பு வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்!! நடு ரோட்டில் நின்ற அவலம்!!
Next articleமோகன்லால் பேசியபோது அவரை எதிர்த்த நயன்தாரா!!