பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட திமுக எம்பி கல்லூரிக்கு வருகையா? ராஜ்நாத் சிங்கை நிறுத்திய ஹெச் ராஜா

0
146

பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட திமுக எம்பி கல்லூரிக்கு வருகையா? ராஜ்நாத் சிங்கை நிறுத்திய ஹெச் ராஜா

பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவிற்கு திமுக கூட்டணி எம்.பி பச்சமுத்து என்கின்ற பாரிவேந்தரின் கல்லூரியான எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பாக டாக்டர் பட்டம் வழங்க உள்ளது,. இதனை வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் நாளை கலந்து கொண்டு வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்க உள்ளார் என்று அழைப்பிதழில் குறிப்பிட்டு இருந்தது,

ஆனால் திடீரென மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,. கவிப்பேரரசு வைரமுத்து சில மாதங்களுக்கு முன் இந்து தெய்வமான ஆண்டாளை கடுமையாக விமர்சித்து கவிதை எழுதி இருந்தார், இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தன, மேலும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வைரமுத்துவிற்கு நெருக்கடி கொடுத்தனர்,. வைரமுத்துவிற்கு ஆதரவாக திமுக போன்ற கட்சிகள் ஆதரவாக இருந்தன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரபல பாடகி சின்மயி, வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார், இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது, இப்படி பல சர்ச்சைகளில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் வைரமுத்துவிற்கு ராஜ்நாத் சிங் அவர்கள் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க கூடாது என பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின, உடனடியாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொடர்பு கொண்டு தமிழகத்தில் பாஜகவிற்கு எதிராக நிலவும் சூழ்நிலை பற்றியும், வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் உங்கள் கையால் கொடுத்தால் சரியாக இருக்காது என்று கூறி வருகையை ரத்து செய்ய வைத்திருக்கிறார்,.

மேலும் திமுக கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் இந்திய ஜனநாயக கட்சி தலைவரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பச்சமுத்து என்கின்ற பாரிவேந்தர் அவர்களின் பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டனர் என்பதையும் ஹெச்.ராஜா அவர்கள் பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் தகவலை தெரிவித்து இருக்கிறார்,. இதனையடுத்தே ராஜ்நாத் சிங் தனது முடிவை மாற்றி இருக்கிறார்,.

தமிழக பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் மத்திய அரசுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாகவே கவிஞர் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்க ராஜ்நாத் சிங் தனது நிகழ்ச்சியை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகோவை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் குற்றவாளிக்கு தூக்கு?
Next article20 கோடி முஸ்லிம்களுக்கு பாதிப்பு – என்.ஆர்.சி குறித்து அமெரிக்க நாடாளுமன்ற அமைப்பு அறிக்கை.