திமுக வை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டு வைக்கவில்லை.. விஜய் புரிஞ்சிக்கோ!! அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்!!

0
13
Did not join hands with AIADMK to defeat DMK.. Vijay Burinjiko!! Advice given by Annamalai!!
Did not join hands with AIADMK to defeat DMK.. Vijay Burinjiko!! Advice given by Annamalai!!

BJP: பாஜக அண்ணாமலை சிவகிரியில் நடைபெற்ற இரட்டை கொலை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், முக்கிய தெருக்களில் சிசிடிவி கேமரா என்பதே இல்லை. குறிப்பாக கொங்கு பகுதியில் தொடர்ந்து கொலை குற்றங்கள் நடந்து வருகிறது. தற்போது வரை நடைபெற்ற நான்கு கொலை வழக்குகளை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.

எவ்வளவு காலம் மக்கள் அச்சத்துடன் வாழ முடியும் என்று கேள்வி எழுப்பினார். மேற்கொண்டு நாங்கள் எப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டோமோ அன்றையிலிருந்து ஸ்டாலின் பேச்சு இதுவாகத்தான் உள்ளது. எங்களது கூட்டணி குறித்து இப்படி பயப்படுவது ஏன்?? திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்த கூட்டணி கிடையாது மாறாக நல்லாட்சி அமைக்க தான் இந்த கூட்டணி அமைக்கப்பட்டது.

தமிழகத்தில் பாஜக தான் மிகவும் பலவீனமான கட்சி என முதல்வர் கூறுகிறார். தற்சமயம் ஓபன் பீல்டாக தான் அரசியல் உள்ளது. யார் வேண்டுமானாலும் களம் காணலாம். அதேபோல மத்திய அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் பட்சத்தில் இந்தியாவில் ஜாதி என்ற அரசியல் இருக்காது என கூறினார். அதுமட்டுமின்றி விஜய் என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளார் என்பது குறித்து மக்களிடம் விளக்க வேண்டும்.

இதற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துவது நல்லது என்று அறிவுரை கூறியுள்ளார். மேலும் பாஜக மட்டுமின்றி மாற்று கட்சியும் ஆட்சிக்கு வர ஏதுவான சூழல்தான் தற்போது இருப்பதாக தெரிவித்தார்.

Previous articleபெரும் சிக்கலில் மாட்டிப்பீங்க திருந்திக்கோங்க.. பாகிஸ்தானை எச்சரித்த ஐ.நா!!
Next articleமாணவர்களே ரெடியா.. நாளை வெளியாகும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு!! எந்த இணையத்தில் பார்க்கலாம்??