திருமணம் ஆகாததுக்கு சாமி என்னடா குத்தம் செஞ்சது? சேலத்தில் பரபரப்பு!

Photo of author

By Hasini

திருமணம் ஆகாததுக்கு சாமி என்னடா குத்தம் செஞ்சது? சேலத்தில் பரபரப்பு!

தமிழகத்தில், சேலம் மாவட்டத்தில், திருமணமாகாத விரக்தியின் காரணமாக இளைஞர் ஒருவர், கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில், உள்ள நவகிரக சிலைகளை உடைத்து உள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில்  கன்னங்குறிச்சி ஆத்துக்காடு பகுதியில், உள்ள ஒரு ஆலயம் தான், அருள்மிகு மாரியம்மன் கோவில்.

இன்று காலை பொதுமக்கள் வழிபாடு நடத்தச் சென்றனர். அப்போது கோயில் வளாகத்தின் முன்பகுதியில் உள்ள நவகிரகங்களில் கேது, சூரியன், புதன் என ஐந்து சிலைகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் உதவி ஆணையாளர் ஆனந்த குமார் தலைமையிலான கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது வேம்படிதாளம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் தான் சிலைகளை உடைத்தார் என்பது  தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது சதீஷ் தாயில்லாமல் சித்தி வீட்டில் தங்கி வருவதாகவும், அவருக்கு நீண்ட நாட்களாக வரன் பார்த்தும் திருமணம் அமையாத காரணத்தினால், விரக்தியின் மேலிட்டு கோவில் சிலைகளை உடைத்த தாகவும் காவல்துறையினரிடம் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த சில காலங்களாகவே கோவில்களில் மீது ஏற்படும் வன்முறைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன என்றும் பல்வேறு குற்ற சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளதால், அவர் இந்த காரணத்திற்காகத் தான் சிலையை உடைத்தாரா? அல்லது கிறிஸ்துவ மிஷனரிகளின் பிடியில் சிக்கிக்கொண்டு சாமி சிலைகளை உடைத்தாரா? என்றும் சமூக வலைத்தளங்களில் பல பதிவுகளும், கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இந்து கோவில்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில் கோவில்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், அனைத்து கோவில்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.