ஜோதிகா குறித்த பல்வேறு கருத்துகளும் சர்ச்சை பேச்சுகளும் இழந்து வரக்கூடிய நிலையில் நடிகர் சூர்யாவுக்கும் சமீப காலமாகவே அவருடைய படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை. அதற்கு காரணம் சூர்யா தான் என பலர் கூறிவரும் நிலையில் அப்படி என்ன சூர்யா செய்து விட்டார். ஏன் சூர்யாவிற்கு இது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது என பலரும் யோசிக்கலாம்.
2018 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுகள் ஞாபகம் இருக்கும் பட்சத்தில் சூர்யாவிற்கு ஏன் தற்பொழுது இந்த நிலைமை என்பது அனைவராலும் யோகிக்க முடியும். காரணம் 2018 ஆம் ஆண்டு நீட் தேர்வு உட்பட பல்வேறு அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு நடிகர் சூர்யா தன்னுடைய கருத்துக்களை சொல்ல துவங்கினார். அதே சமயம் அவருடைய காப்பான் திரைப்பட விழாவின் பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்பது போல சூர்யாவிற்கு எச்சரிக்கையும் விட்டுச் சென்றார்.
அவரைப் போலவே அவருடைய மனைவி நடிகை ஜோதிகா அவர்களும் தஞ்சை பெரிய கோவில் பற்றிய பல கருத்துக்களை தெரிவித்ததும் அதிமுக ஆட்சியில் இருக்கும் போது போராளியாக தன்னை காட்டிக் கொண்டார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பின் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரின் உடைய குரலும் வெளிவரவில்லை.இவை அனைத்துமே இவர்களுடைய சினிமாவின் லாபத்திற்காகத்தான் என பலரும் கூறி வருகின்றனர். கருத்து தெரிவிப்பதை நிறுத்திவிட்டது மட்டுமல்லாது மும்பைக்கு குடும்பத்தோடு சென்று விட்டனர்.
தேவையற்ற அரசியல் விஷயங்களில் மூக்கை நுழைத்து தங்களுடைய விருப்பப்படி கருத்து தெரிவித்து வந்தது தான் தற்பொழுது நடிகர் சூர்யா அவர்களின் திரைப்படங்கள் போடாமல் போவதற்கான காரணம் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.